சிறு வயதில் நீங்கள் பார்த்துப் பார்த்து ரசித்த தொலைகாட்சி நிகழ்ச்சிகளை கூடுதல் பிரம்மாண்டத்துடன் கதையாய் கொண்டு வர நினைத்தோம். அந்தத் தாக்கத்தின் உருவாக்கம் தான் இந்த சிந்துபாத் கதை. சிந்துபாத் நமது சிறு வயது பாட புத்தகங்களில் பயணம் செய்த ஒரு கதாபாத்திரம். இப்போது அவனை மீண்டும் இக்கதையில் உயிர்ப்பித்துக் கொண்டு வந்து உள்ளோம். இவன் ஸ்வாரஸ்யங்களின் புகலிடம்; ஏன்? ஆசியாவின் ஆரிபார்ட்டர் என்று சொன்னாலும் அதுவும் கூட மிகை ஆகாது.
காதல், காமம், மகிழ்ச்சி, துக்கம், வீரம், கோமாளித் தனம், நகைச்சுவை, கோபம், ஆசை, அன்பு, ஏமாற்றம், ஈகை என ஒரு கதையில் என்னென்ன இருக்க வேண்டுமோ அத்தனையும் இந்தக் கதையில் உள்ளது. மொத்தத்தில் கதையை படிக்க ஆரம்பிக்கும் போது தொடக்கத்தில் உருவாகும் சுவாரஸ்யத்தை இறுதி வரையில் குறையாமல் பார்த்துக் கொண்டு உள்ளோம். படித்துப் பாருங்கள் இக்கதையில் வரும் ஒவ்வொரு கதா பாத்திரங்களும் ஒவ்வொரு விதத்தில் உங்களை பிரமிக்க வைக்கும்.
மொத்தத்தில் இந்த அற்புதப் பயன்பாடு உங்கள் நேரத்தை இனிமையாகக் கழிக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். இக்கதை இதுவரையில் இலக்கியங்களில் நீங்கள் காணாத புதியதொரு உலகத்திற்கு உங்களை கரம் பிடித்து அழைத்துச் செல்லும்.